Tuesday, January 1, 2013

Linux vs Windows - நான் அறிந்தவரை - ஏன் லினக்ஸ் உபயோகிக்க வேண்டும்?

1. லினக்ஸ் எப்போதுமே இலவசம் மற்றும் சுதந்திரம்

நீங்கள் லினக்ஸ்/யுனிக்ஸ் அறிந்தவர் என்றல் நீங்கள் அதை உங்கள் விருப்பம் போல் மாற்றி மற்றவரோடு பரிமாறலாம் (free and freedom) - விண்டோஸ் எப்போதுமே இலவசம் இல்லை

2. அறியப்பட்ட வைரஸ்கள் லினக்சில் மிகவும் குறைவு - விண்டோஸ் தினமும் புது வைரஸ்கள் வந்துகொண்டே இருக்கும்

3. அறியப்பட்ட வைரஸ்களுக்கு தீர்வு லினக்சில்மிகவும் சீக்கிரம் வந்துவிடும்.

ஏனென்றால் இது மிக அதிகமான நபர்களால் (community driven) சரியாக்கப்பட்டு கொண்டே இருக்கும் - விண்டோஸ் ஒரு நிறுவனம் சார்ந்த இயங்கு பொருள் (corporate driven - Microsoft) - அவர்கள்தான் அந்த வைரஸ்களை உறுதிப்படுத்தி சரியான தீர்வுகளை வழங்க வேண்டும்.

4. லினக்ஸ் முழுதும் இலவச மென்பொருள்களால் ஆனது.

நாம் உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் பெரும் பான்மையானவற்றை இலவசமாக பெறலாம். (எ. கா. ஓபன் ஆபீஸ் அல்லது லிபரே ஆபீஸ்  - மைக்ரோசாப்ட் ஆபீஸ்)

5. லினக்சில் சில பிரிவுகள் நிறுவனம் சார்ந்த இயங்கு போருலல்களை வழங்குகின்றன.

6. மைக்ரோசாப்ட்இல் xp, vista, windows 7, windows 8 என்று வேறு வேறு தலைமுறை பதிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் முந்தைய பதிப்புகளை விட அதிகமான முன்னேற்றங்களுடன் வரும். - லினக்ஸ் வேறு வேறு இயங்கு தளம் இருக்கிறது (எ. கா. உபுண்டு, பெப்பெர்மிண்ட், லினுச்மின்ட், போதி) -

இதுபற்றி அறிந்து கொள்ள இந்த தளத்தை பாருங்கள்.

                           www.distrowatch.com

இந்த தளம் லினக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு ஒரு வர பிரசாதம். லினக்ஸ் இயங்கு தளம் பற்றியும் அவற்றின் தரம் பற்றியும் அறிதுகொள்ள மிகவும் உபயோகமாக இருக்கும். வலது பக்கம் இருக்கும் தர வரிசை இந்த தளத்தில் ஒவ்வொரு லினக்ஸ் இயங்கு தளமும் எவ்ளவு முறை பார்க்கப்பட்டு இருக்கிறது என்பதை பொறுத்து வரிசை படுத்தப்பட்டு இருக்கும். இதை பார்த்து இவளவு லினக்ஸ் இயங்கு தளங்கள் இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சர்ய படப்போவது உறுதி.

7. ஒவ்வொரு லினக்ஸ் இயங்கு தளமும் வெவ்வேறு வடிவங்களில் (flavours) வரும். KDE - மிகவும் பொலிவான லினக்ஸ் ஆனால் அதிகமான வளம் தேவைப்படும் (memory, RAM - system resource) XFCE - சற்று குறைவான வளம் தேவைப்படும். ஆனால் உபயோகத்தை பொருத்தவரை KDE என்ன எல்லாம் பயன்படுமே அதை போலவே இருக்கும் LXDE - மிக குறைவான வளம் தேவைப்படும் லினக்ஸ் வகை. நீங்கள் netbook/laptop மிக குறைவான RAM/memory இருந்தால் இதைதான் பயன் படுத்த வேண்டும். என்னுடைய லேப்டாப் 1 GB கொண்டது. இதில் இந்த வகை லினக்ஸ் தான் பயன் படுத்தி வருகிறேன்.

     நான்தற்போது peppermint OS பயன் படுத்தி வருகிறேன். இது கணினியை on செய்த உடன் 80 MB memory (RAM) தான் உபயோகிக்கும். இது விண்டோஸ் உடன் அல்லது மற்ற லினக்ஸ் வடிவங்களுடன் சேர்த்து பார்க்கும்போது மிகவும் குறைவு.

8. மிகவும் அதிகமான லினக்ஸ் வகைகள் Debian என்னும் லினக்ஸ் சார்ந்தவை இதில் மிக அதிகமான மென் பொருள்கள் (~ 60,000) இருக்கிறது. எனவே எந்த மென்பொருள் நீங்கள் விண்டோஸ் இல் உபயோகித்து வந்தீர்களோ அதுவோ அல்லது அதற்கு சமமான மென்பொருளோ கண்டுபிடித்து உபயோகிப்பது மிகவும் எளிது.

     இது அனைத்தும் இப்போது எனது ஞாபத்தில் இருந்து எழுதுவது. இது பற்றி வேறு தகவல்கள் எனக்கு ஞாபகம் வந்தால் அவ்வப்போது எழுதுகிறேன். நீங்களும் இது பற்றி தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.
     இதுவரை நீங்கள் www.distrowatch.com சென்றதில்லை என்றால் அந்த தளத்தை ஒரு முறை பார்வை இடுங்களேன். உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துகள். நன்றி. மீண்டும் சிந்திப்போம்/சநதிப்போம்.

Monday, December 31, 2012

இந்த தளம் பற்றி (About this website)

நான் லினக்ஸ் ஒரு இரண்டு வருட காலமாக உபயோகித்து வருகிறேன். எனது விண்டோஸ் மடி கணினி வைரஸ்களால் பாதிக்கப்பட்டு சரியாக்கப்பட்டு உபயோகித்து வந்தேன். ஒரு நல்ல நாளில் அது சரியாக்க முடியாத நிலைக்கு சென்றவுடன் உபுண்டுவை நிறுவி உபயோத்து வந்தேன். இது wubi என்னும் நிரலியால் சாத்தியமானது. அது ஒரு சாதாரண விண்டோசில் இயங்கும் மென்பொருள். இதில் இருந்து ஆரம்பித்து பின்னர் unetbootin என்னும் மென்பொருள் உபயோகிக்க ஆரம்பித்தேன். இது முக்கியமான லினக்ஸ் இயங்கு தளத்துடன் வரும். முதலில் இதை நிறுவி பின்னர் அதிலிருந்து எந்த லினக்ஸ் நாம் உபயோகிக்க விரும்புகிறோமோ அதை முயற்சி பண்ண ஆரம்பிக்கலாம். இதிலிருந்து ஆரம்பித்து விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இரண்டும் சேர்த்து உபயோகிக்க ஆரம்பித்து பின்னர் லினக்ஸ் மட்டுமே என்னுடைய மடி கணினியில் இருக்கிறது. விண்டோஸ் முழுவதுமாக விளக்கி விட்டேன். முதலில் உபுண்டுவில் ஆரம்பித்து பின்னர் லினக்ஸ் மின்ட், பெப்பெர்மிண்ட், லுபுண்டு, போதி என எனது பயணம் நெடியது. ஆனால் நான் லினக்ஸ் பொருத்தவரை ஒரு சாதாரண பயனாளிதான். என்னால் லினக்ஸ் பற்றிய அணைத்து விஷயங்களும் அதாவது லினக்ஸ் பற்றிய அடிப்படை அறிவோ அல்லது அது எவ்வாறு செயல் படுகிறது என்பதோ தெரிந்தவன் அல்ல. ஆனால் அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்து இருக்கிறேன். எப்படி ஒரு லினக்சில் இருந்து இன்னொரு லினக்ஸ் மாறவேண்டும் அல்லது எப்படி நமக்கு தேவையான லினக்ஸ் கண்டுபிடித்து உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி இந்த தலத்தில் சொல்லலாம் என்று நினைக்கிறன். இது அனைத்தும் எனது சொந்த பயன்பாடுகலீல் இருந்து எழுதப்போகிறேன். நான் உபயோகித்த லினக்ஸ் பற்றியும் எப்படி அவற்றை பயன் படுத்துவது என்பது பற்றியும் சொல்லப்போகிறேன். முதல் பதிவு எப்படி லினக்ஸ் நிறுவுவது என்பதாக இருக்கும். நானும் லினக்ஸ் கற்றுக்கொள்ளும் ஒரு மாணவன்தான். உங்கள் கேள்விகளும் அல்லது உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன. அனைவருக்கும் எனது புத்தாண்டு நல வாழ்த்துக்கள். நன்றி.