Monday, December 31, 2012

இந்த தளம் பற்றி (About this website)

நான் லினக்ஸ் ஒரு இரண்டு வருட காலமாக உபயோகித்து வருகிறேன். எனது விண்டோஸ் மடி கணினி வைரஸ்களால் பாதிக்கப்பட்டு சரியாக்கப்பட்டு உபயோகித்து வந்தேன். ஒரு நல்ல நாளில் அது சரியாக்க முடியாத நிலைக்கு சென்றவுடன் உபுண்டுவை நிறுவி உபயோத்து வந்தேன். இது wubi என்னும் நிரலியால் சாத்தியமானது. அது ஒரு சாதாரண விண்டோசில் இயங்கும் மென்பொருள். இதில் இருந்து ஆரம்பித்து பின்னர் unetbootin என்னும் மென்பொருள் உபயோகிக்க ஆரம்பித்தேன். இது முக்கியமான லினக்ஸ் இயங்கு தளத்துடன் வரும். முதலில் இதை நிறுவி பின்னர் அதிலிருந்து எந்த லினக்ஸ் நாம் உபயோகிக்க விரும்புகிறோமோ அதை முயற்சி பண்ண ஆரம்பிக்கலாம். இதிலிருந்து ஆரம்பித்து விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இரண்டும் சேர்த்து உபயோகிக்க ஆரம்பித்து பின்னர் லினக்ஸ் மட்டுமே என்னுடைய மடி கணினியில் இருக்கிறது. விண்டோஸ் முழுவதுமாக விளக்கி விட்டேன். முதலில் உபுண்டுவில் ஆரம்பித்து பின்னர் லினக்ஸ் மின்ட், பெப்பெர்மிண்ட், லுபுண்டு, போதி என எனது பயணம் நெடியது. ஆனால் நான் லினக்ஸ் பொருத்தவரை ஒரு சாதாரண பயனாளிதான். என்னால் லினக்ஸ் பற்றிய அணைத்து விஷயங்களும் அதாவது லினக்ஸ் பற்றிய அடிப்படை அறிவோ அல்லது அது எவ்வாறு செயல் படுகிறது என்பதோ தெரிந்தவன் அல்ல. ஆனால் அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்து இருக்கிறேன். எப்படி ஒரு லினக்சில் இருந்து இன்னொரு லினக்ஸ் மாறவேண்டும் அல்லது எப்படி நமக்கு தேவையான லினக்ஸ் கண்டுபிடித்து உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி இந்த தலத்தில் சொல்லலாம் என்று நினைக்கிறன். இது அனைத்தும் எனது சொந்த பயன்பாடுகலீல் இருந்து எழுதப்போகிறேன். நான் உபயோகித்த லினக்ஸ் பற்றியும் எப்படி அவற்றை பயன் படுத்துவது என்பது பற்றியும் சொல்லப்போகிறேன். முதல் பதிவு எப்படி லினக்ஸ் நிறுவுவது என்பதாக இருக்கும். நானும் லினக்ஸ் கற்றுக்கொள்ளும் ஒரு மாணவன்தான். உங்கள் கேள்விகளும் அல்லது உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன. அனைவருக்கும் எனது புத்தாண்டு நல வாழ்த்துக்கள். நன்றி.